அந்த மனசுதான் சார் கடவுள்.. பாவா லட்சுமணனுக்கு கேபிஒய் பாலா செய்த மிகப்பெரிய உதவி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் அவரை கண்டுகொள்ளாத நிலையில் விஜய் டிவி புகழ் கேபிஒய் பாலா தன்னால் முடிந்த நிதி உதவி செய்துள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஒரு சில நடிகர்கள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர் என்பதும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் அவரை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் விஜய் டிவி புகழ் கேபிஒய் பாலா அவரை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த நிதி உதவி செய்துள்ளார்.
இது குறித்து பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இன்று நான் சின்ன வயசில் இருந்தே ரசித்த நகைச்சுவை நடிகர் அன்பு அண்ணன் பாவா லட்சுமணனை சந்தித்து நலம் விசாரித்து என்னால் முடிந்த ரூபாய் 30 ஆயிரம் கொடுத்தேன். கூடிய விரைவில் அன்பு அண்ணன் பூரண குணமடைந்து திரைப்படங்களில் நடிப்பதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை அடுத்து நடிகர் பாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தன் வங்கிக் கணக்கில் 32,000 தான் இருக்கிறது என்று தெரிந்தும், அதில் 30,000 ரூபாயை சூப்பர் குட் பிலிம்ஸ் பாவா லட்சுமணன் அவர்களுக்கு வழங்கி இருக்கிறார் கலக்கப் போவது யாரு புகழ் பாலா. இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. #KPYBala #KalakkapovathuYaaruBala #BavaLakshmanan pic.twitter.com/5E6WbkAQeA
— Harish (ഹരീഷ്) (@chnharish) June 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments