இதுல உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கு? ட்ரோல் செய்தவர்களை வச்சு செஞ்ச விஜய்டிவி ஜாக்குலின்!

  • IndiaGlitz, [Sunday,May 30 2021]

விஜய் டிவியின் ’கலக்கப்போவது யார்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜாக்குலின் தற்போது ’தேன்மொழி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். அவருடன் இருக்கும் நபர் யார் என்ற கேள்வி கேட்டு பலர் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டனர். உங்களுடன் இருப்பது உங்களுடைய தம்பியா? அண்ணனா? போன்ற கேள்விகள் கமெண்ட்ஸில் பதிவான நிலையில் தற்போது அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

என்னுடன் அந்த புகைப்படத்தில் இருந்தவர் ஒரு பெண் என்றும் அவர் ஒரு தனது நெருங்கிய தோழி என்றும் அவர் ஒரு போட்டோகிராபர் என்றும் நிறைய கமர்ஷியல் செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்த ஜாக்குலின், அவர் தன்னுடைய காசில் ஷார்ட் முடியை வெட்டி உள்ளார் என்றும் அதில் உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஒரு சிலர் தேவையில்லாத கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளார்கள் என்றும் அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்றும் நான் அவர்களுக்காக கமெண்ட்ஸ்களை ஆஃப் செய்ய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பெண்ணோ அல்லது பையனோ தங்கள் இஷ்டப்படி முடியை வளர்த்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையாக்கியவர்களை நினைத்து தான் தனக்கு பரிதாப இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு முடி விஷயத்தில் கூட அடுத்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அப்படி இருந்தும் இப்படி தான் கமெண்ட் செய்வேன் என்று நீங்கள் முடிவு செய்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்றும் ஜாக்குலின் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் மனம் நோகும்படி புகைப்படங்களில் கமெண்ட்ஸ் செய்வதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் அப்படித்தான் கமெண்ட் செய்வேன் என்று நீங்கள் முடிவெடுத்தால் அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் அந்த வீடியோவில் ஜாக்குலின் குறிப்பிட்டுள்ளார்.