close
Choose your channels

ஜாக்குலின் வேற லெவல் வீடியோ.. கமெண்ட்ல இப்படி கேட்காதீங்க..!

Monday, April 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ‘இப்படியெல்லாம் கமெண்டில் கேட்காதீர்கள் என கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஜாக்குலின் அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு ’தேன்மொழி’ என்ற சீரியலில் நடித்தார் என்பதும் தெரிந்ததே.

நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலின் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் 80 கிலோ வெயிட் தூக்கும் வீடியோவை வெளியிட்டு கமெண்டில் இது எத்தனை கிலோ என்று கேட்காதீர்கள், நான் என்ன தக்காளியா வாங்க போறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment