close
Choose your channels

வேற லெவலில் பளூதூக்கும் விஜய் டிவி ஜாக்குலின் .. வைரல் வீடியோ..!

Saturday, June 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி மூலம் பிரபலமான ஜாக்குலின் அவ்வப்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் வேற லெவலில் பளூதூக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் தெரிந்ததே.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’தேன்மொழி’ என்ற சீரியலில் நடித்த அவர் நயன்தாராவின் தங்கையாக ’கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ள ஜாக்குலின் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். சமீபத்தில் அவர் வெளிநாட்டு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் பளூதூக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment