'ஹேப்பி பர்த்டே பார்ட்னர்.. லவ் யூ பார்ட்னர்.. விஜய் டிவி ஜாக்குலின் வெளியிட்ட வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி ஜாக்குலின் தனது நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’தேன்மொழி’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் ஜாக்லின். அதுமட்டுமின்றி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின், ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும், அவர் அவ்வப்போது வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தனது 7 வருட நண்பரான ஜானி பின் என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் பதிவு செய்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஹேப்பி பர்த்டே பார்ட்னர்..! எப்படி பிரண்ட் ஆனோம், எதுக்கு பிரண்ட் ஆனோம் என்று தெரியவில்லை. பட், நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முழுமையாக அறிந்த நல்ல நண்பர்கள். நாங்கள் உண்மையான நட்புடன் இருக்கிறோம். நம்ம பசங்களும் இதுபோல் பிரண்டாக இருக்கணும். நீ பெரிய ஆளா வருவடா.. லவ் யூ பார்ட்னர்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com