மேக்கப் இல்லை.. நகைகள் இல்லை.. இதுதான் உண்மையான நான்.. மேக்கப் இல்லாத டிடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி பிரபலமான டிடி என்ற திவ்யதர்ஷினி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து இதில் ’லிப்ஸ்டிக் மற்றும் லென்ஸ் தவிர வேறு எந்த மேக்கப்பும் இல்லை இதுதான் உண்மையான நான்’ என்று பதிவு செய்திருப்பதை அடுத்து ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக் குவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ’காபி வித் டிடி’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி என்பதும், அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் திரைப்பட இசை வெளியீட்டு விழா உள்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் என்பதும் தெரிந்தது.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடிக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் கிளாமர் புகைப்படங்கள், வெளிநாட்டு சுற்றுப்பயண புகைப்படங்கள், தான் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த புகைப்படங்கள் உள்பட பல விஷயங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் ஒரு புகைப்படத்தை டிடி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். லென்ஸ் மற்றும் லிப்ஸ்டிக் மட்டுமே அணிந்து உள்ளேன், சிகை அலங்காரம் இல்லை, மேக்கப் இல்லை, நகைகள் இல்லை, இதுதான் எனது ஞாயிற்றுக்கிழமை தோற்றம். மேக்கப் இல்லாமல் இருக்கும் இந்த புகைப்படம் எப்படி இருக்கிறது என்று அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ’நீங்கள் இயற்கையாகவே அழகு உங்களுக்கு எதற்கு மேக்கப்’ என்பது உள்பட பல கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments