மேக்கப் இல்லை.. நகைகள் இல்லை.. இதுதான் உண்மையான நான்.. மேக்கப் இல்லாத டிடி..!

  • IndiaGlitz, [Sunday,May 19 2024]

விஜய் டிவி பிரபலமான டிடி என்ற திவ்யதர்ஷினி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து இதில் ’லிப்ஸ்டிக் மற்றும் லென்ஸ் தவிர வேறு எந்த மேக்கப்பும் இல்லை இதுதான் உண்மையான நான்’ என்று பதிவு செய்திருப்பதை அடுத்து ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக் குவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ’காபி வித் டிடி’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி என்பதும், அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் திரைப்பட இசை வெளியீட்டு விழா உள்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் என்பதும் தெரிந்தது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடிக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் கிளாமர் புகைப்படங்கள், வெளிநாட்டு சுற்றுப்பயண புகைப்படங்கள், தான் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த புகைப்படங்கள் உள்பட பல விஷயங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் ஒரு புகைப்படத்தை டிடி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். லென்ஸ் மற்றும் லிப்ஸ்டிக் மட்டுமே அணிந்து உள்ளேன், சிகை அலங்காரம் இல்லை, மேக்கப் இல்லை, நகைகள் இல்லை, இதுதான் எனது ஞாயிற்றுக்கிழமை தோற்றம். மேக்கப் இல்லாமல் இருக்கும் இந்த புகைப்படம் எப்படி இருக்கிறது என்று அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ’நீங்கள் இயற்கையாகவே அழகு உங்களுக்கு எதற்கு மேக்கப்’ என்பது உள்பட பல கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

More News

சிலம்ப சண்டை பயிற்சிக்கு பின் மாளவிகா செய்த வேலையை பாருங்க.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை மாளவிகா மோகனன் தனது தோழியுடன் இணைந்து சிலம்பு சண்டை பயிற்சி பெற்ற பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

இன்று 'கோட்' படப்பிடிப்பின் கடைசி நாள்.. நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த நடிகர்..

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும்

ஐஸ்லாந்தில் 'புஷ்பா 2' பாடலுக்கு ஆட்டம் போட்ட கமல்-ரஜினி பட நடிகை.. வைரல் வீடியோ..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை மீனா, ஐஸ்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் அங்கு அவர் 'புஷ்பா 2' படத்தின் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட

ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறதா? அவரே அளித்த விளக்கம்..!

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி  சீரியல் மற்றும் திரைப்பட நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸ் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.