மாலத்தீவின் அழகு, நயன்தாராவின் பாடல்: விஜய் டிவி டிடியின் வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Friday,March 05 2021]

மாலத்தீவின் கடல் அழகின் பின்னணியில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாடலுக்கு போஸ் கொடுக்கும் விஜய் டிவி டிடியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து அவர் அழகழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இருமுகன்’ படத்தில் நயன்தாரா மற்றும் விக்ரம் நடித்த பாடலுக்கு விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்துள்ளார். மாலத்தீவின் அழகிய கடல் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும், சுமார் 400 கமெண்ட்ஸ்கள் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

விஷ்ணுவிஷாலின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'காடன்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது

பதுங்கி பாய்வாரா சசிகலா? அரசியல் விலகலைக் குறித்து வைரலாகும் பிரத்யேக பேட்டி!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை சென்று மீண்டவர் திருமதி சசிகலா.

மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: புகார் கூறிய தயாரிப்பாளருக்கு தமிழ் ஹீரோ எச்சரிக்கை!

தன் மீது பணமோசடி புகார் அளித்த தயாரிப்பாளர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என தமிழ் ஹீரோ ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியில் ரீமேக் ஆகும் சூப்பர்ஹிட் தமிழ் திரைப்படம்: எஸ்.ஆர்.பிரபு வாழ்த்து!

தமிழில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த படக்குழுவினர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

கார்த்தியின் அடுத்த படத்தில் சிம்பு: ரசிகர்கள் ஆச்சரியம்!

கார்த்தியின் அடுத்த படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.