close
Choose your channels

டிடியுடன் இருக்கும் இந்த நபர் யார்? வைரல் புகைப்படங்கள்..!

Monday, April 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி டிடி சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் டிடியுடன் இருக்கும் நபர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

விஜய் டிவி தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி பல வருடங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் என்பதும் அவரது நிகழ்ச்சி அனைத்தும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் டிவி டிடி தற்போது இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கும் தோட்டம் பகுதியில் இருந்து எடுத்த வீடியோவை பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அவர் சற்று முன் உலக புகழ் பெற்ற மாடல் பிராங்கோ என்பவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’மைக்கேல் ஏஞ்சலோ மற்றும் லியானார்டோ டாவின்சி வாழ்ந்த புளோரன்ஸ் என்ற அழகான நகரத்தில் பழம்பெரும் இத்தாலிய மாடல் பிராங்கோ அவர்களை சந்தித்தது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டவசமாக கருதுகிறேன்.

எனக்காக நேரம் ஒதுக்கிய பிராங்கோ அவர்களுக்கு என்னுடைய நன்றி. இத்தகைய அற்புதமான மனிதரை சந்திப்பதே இந்த பயணத்தின் சிறந்த பகுதி ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவு செய்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment