விஜய் டிவியின் இந்த பிரபலமும் கார் வாங்கி விட்டார்.. செம்ம வீடியோ..
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்றும் சொந்த கார், சொந்த வீடு வாங்கி விடுவார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளில் ஒருவர் சுனிதா கார் வாங்கியுள்ளார். அவர் LEXUS nx 300 என்ற மாடல் கார் வாங்கியுள்ளார்.
இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக் குவிந்து வருகிறது. குறிப்பாக விஜய் டிவி பிரபலங்களான டிடி, ரக்சன், ரித்திகா, சோம சேகர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை சுனிதாவுக்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்கள் ரக்சிதா, அமுதவாணன், சக்தி, முத்துக்குமார், புகழ், பூவையார், ரவீனா, ஷிவானி நாராயணன், தாடி பாலாஜி, மைனா நந்தினி, சரத், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆஜித் உள்பட பலர் கார் வாங்கி செட்டில் ஆன நிலையில் தற்போது சுனிதாவும் கார் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com