கஸ்தூரி சம்பள பிரச்சனை: விஜய்டிவி நிர்வாகம் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

நடிகை கஸ்தூரி தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை இன்னும் விஜய் டிவி தரவில்லை என தனது டுவிட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது;

நாங்கள் ஒரு பொறுப்பான சேனல் என்பதால் எங்களது ஒப்பந்த விதிமுறைகளின்படி எங்கள் சேனல் நிகழ்ச்சிகளில் பணிபுரியும் அனைவருக்கும் சரியான நேரத்தில் சம்பளம் தருவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரியின் சம்பளம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அவருக்கு செலுத்தப்பட்டாலும், அவருடைய ஜிஎஸ்டி ஆவணங்கள் பொருந்தாததால் அவருடைய சம்பளத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து ஜிஎஸ்டி குறித்த சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை நாங்கள் கேட்டுள்ளோம். அது கிடைத்த பிறகு அவருடைய சம்பளம் செட்டில் செய்யப்படும்.

மேலும் எங்கள் சேனலின் மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்கான சம்பளத்தொகை பில்லை அவர் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பதால் எங்களால் அந்த கட்டணம் செலுத்த முடியவில்லை’ என்று விளக்கமளித்துள்ளது

More News

திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி: அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு நேற்று அறிவித்த ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் 5வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குனருடன் மீண்டும் இணையும் கெளதம் கார்த்திக்?

இயக்குனர் சந்தோஷ்குமார் இயக்கிய இரண்டு அடல்ட் திரைப்படங்களான 'ஹர ஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய படங்களில் நடித்தவர் கௌதம் கார்த்திக்.

'தனி ஒருவன் 2' படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தனி ஒருவன்'. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை

கொரோனாவால் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் மறைவு!!!

கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் ராம.

ஆன்லைன் வகுப்பால் தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில்… அதிலேயே உலகச் சாதனை படைத்த நம்ம ஊரு பொண்ணு!!!

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரி படிப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறியிருக்கிறது.