ரன்பீர் கபூர் பட புரமோஷனுக்காக மும்பை சென்ற விஜய் டிவி பிரபலங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த ’ஷம்ஷீரா’ என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய் தத், வாணி கபூர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரபலங்கள் மும்பைக்கு சென்று புரோமோஷன் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி பிரபலமான டிடி என்கிற திவ்யதர்ஷினி சமீபத்தில் மும்பை சென்ற ரன்பீர் கபூருடன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஷிவாங்கி மும்பைக்கு சென்ற ரன்பீர் கபூர் உடன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து புகைப்படங்களை ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மும்பைக்கு முதல் முறையாக வந்திருக்கிறேன் என்றும் அதுவும் ரன்பீர் கபூரின் படத்தின் புரமோஷனுக்காக வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்றும் ஷிவாங்கி அதில் குறிப்பிட்டுள்ளார்.
Well this happened today
— DD Neelakandan (@DhivyaDharshini) July 10, 2022
RANBIR RAJKAPOOR ??
Hope this open more avenues for Tamil hosts in Bollywood #shamshera promotions Thnks for having me over @yrf
Can’t wait to show you the content I created with HIM?? pic.twitter.com/9MxDyyPxP6
Thats how my first Mumbai trip went??
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) July 11, 2022
Cant wait to share the real deal with you all??#ranbirkapoor #shamshera promotions❤️@yrf @Meta @instagram @oodagaa @vbzu pic.twitter.com/WH808ot7Yy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments