அம்மா, அப்பாவுக்கு திருமணம் செய்து வைத்த விஜய் டிவி பாலா.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

விஜய் டிவி பாலா தனது அம்மா அப்பாவுக்கு 60-ஆம் கல்யாணம் நடத்தி வைத்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் பாலா. முதலில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து அதன் பின் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார்.

காமெடி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சந்தானம் கையால் விருது பெற்றார் என்பதும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி உட்பட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது,.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாலாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது அம்மா பூங்குழலி, அப்பாவு ஜெகந்நாதன் ஆகியோருக்கு 60-ஆம் கல்யாணம் நடத்தி வைத்த புகைப்பட வீடியோவை பாலா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.