வீடியோ எல்லாம் ஷேர் பண்ண முடியாது, நானே வர்றேன்.. விஜய் டிவி பாலாவின் பரந்த மனசு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பாலா ஏற்கனவே ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது உள்பட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி முதியோர் இல்லத்திற்கு அவர் உதவி செய்து வருகிறார் என்றும் அனாதை சிறுவர்களை படிக்க படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பாலா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பெண் தனக்கு போன் செய்து, தனது மகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் நான் அனுப்பும் வீடியோவை நீங்கள் ஷேர் செய்தால் எனக்கு சிகிச்சைக்கு நிதி கிடைக்கும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.
அதன் பின்னர் அந்த வீடியோவை ஷேர் செய்ய தனக்கு விருப்பமில்லை என்றும், நானே உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்றும் கூறி அவரது வீட்டிற்கு பாலா சென்றுள்ளார். அவரது வீட்டில் உடல் நலம் இல்லாத பெண்ணை பார்த்து ஆறுதல் கூறியதோடு அவருடைய சிகிச்சைக்கு ஒரு லட்ச ரூபாய் நேரில் கொடுத்தார்.
அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் பிசியோதெரபி செலவு முழுவதும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் பாலாவை ’வாழும் கர்ணன்’ என்று நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments