யாருக்குமே புடிக்காம இருந்த என்ன உனக்கு மட்டும் எப்படி புடிச்சுது? அறந்தாங்கி நிஷாவின் நெகிழ்ச்சி பதிவு

விஜய் டிவி மூலம் பிரபலமாகி திரையுலகிலும் நடித்து வரும் அறந்தாங்கி நிஷா இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் தனது கணவர் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் குறிப்பாக ’கலக்கப்போவது யாரு’ ‘குக் வித் கோமாளி’ ‘பிக் பாஸ்’ ’காமெடி ராஜா ராணி’ உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் அறந்தாங்கி நிஷா, ‘மாரி 2’, ‘இரும்புத்திரை’ ’கோலமாவு கோகிலா’ ’சீமராஜா’ ’திருச்சிற்றம்பலம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பதும் உலகின் பல நாடுகளுக்கு சென்று அவர் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நிஷாவின் திருமண நாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் இதுகுறித்து அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சியுடன் தனது கணவர் குறித்து பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

அன்றிலிருந்து இன்று வரை என் வெற்றி, என் தோல்வி, என் சந்தோஷம், என் துக்கம், என் நண்பன், என் கணவன், என் காதலன் எல்லாமாக நீ மட்டும் தான் இருக்கிறாய். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள் எல்லாரும் சொல்லுவாங்க. ஆனால் என்னுடைய வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருக்கிறான் என்று சொல்றதுக்கு எனக்கு பெருமையா இருக்கு.

எத்தனையோ விமர்சனங்கள் எனக்காக நீ தாங்கிக் கொண்டாய். யார் என்ன சொன்னாலும் நீங்க சொல்ற ஒரே வார்த்தை ’எதையும் கண்டுக்காம போ, கண்டிப்பா நீ ஜெயிப்ப’. இந்த ஒரு வார்த்தை தான் இப்ப வரைக்கும் நான் ஓட்டுவதற்கு காரணம்.

கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆகுது, நம்பவே முடியல. யாருக்குமே புடிக்காம இருந்த என்ன உனக்கு மட்டும் எப்படி புடிச்சுது? என் வாழ்நாள் மூச்சு இருக்கிற வரைக்கும் எந்த நேரத்திலும் உங்களை கஷ்டப்படாம சந்தோஷமா பாத்துப்பேன், இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தங்கம்........ ‘என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து நிஷாவுக்கு பலர் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.