close
Choose your channels

விஜய் டிவி ப்ரியங்கா மருத்துவமனையில் அனுமதி!

Sunday, May 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா என்பது தெரிந்ததே. காமெடி, கேலி, கிண்டல், பொழுதுபோக்கு மற்றும் சீரியஸ் என பல்வேறு விதங்களில் அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். அவருடைய சிரிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கள்ளங்கபடம் இல்லாமல் புன்னகையுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதே அவருடைய வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடதக்கது. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்பட ஒருசில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி விஜய் டிவி பிரியங்கா மருத்துவமனையில் ஏப்ரல் 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோவை அவர் தற்போது தான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி பிரியங்கா ஒரு சாப்பாட்டு பிரியர் என்பதை அவரே பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார் என்பதும் சக தொகுப்பாளினிகள் இதுகுறித்து அவரை அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்து வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment