விபத்தில் சிக்கிய மணிமேகலை: நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலைக்கு ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்து நிகழ்ந்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு கார் விபத்து நிகழ்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் ஆகிய இருவரும் சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்கள் என்பதும், இந்த கார் குறித்த விபரங்களை மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினாலும் பழைய காரை மறக்கக்கூடாது என்பதற்காக அந்த காரில் சமீபத்தில் ஒரு டிரிப் சென்றுள்ளார்கள். அப்போது லாரி ஒன்றில் மோதி லேசாக உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் மணிமேகலை, ஹூசைன் இருவருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை என்றாலும் காருக்கு சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்போது மணிமேகலை மட்டும் விபத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாராம். எதிர்காலத்தில் இதை எல்லாம் போட்டுப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் விபத்துக்குள்ளாகி சாலையில் நின்றிருந்த மணிமேகலையிடம் பலர் என்னாச்சு என்று அக்கறையுடன் விசாரித்ததாகவும் அவர்கள் அன்புக்கு தனது நன்றி என்றும் மணிமேகலை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு விபத்து நடந்த பின்னர்தான் மணிமேகலைக்கு திருமணம் ஆனதாகவும் அதேபோல் 2021 ஆம் ஆண்டு விபத்து நடந்த பின்னர் அவருக்கு நல்லது ஏதாவது நடக்கும் என்றும் சிலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு தனக்கு பல சோதனைகளை தந்ததாகவும் சுடுதண்ணி காலில் கொட்டியது, தற்போது விபத்து என தொடர்ந்து சோதனைகள் ஆக இருப்பதால் 2022 வந்தவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் மணிமேகலையை கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments