பீச் உடையணிந்து ரசிகர்களுக்கு மெசேஜ் கொடுத்த தொகுப்பாளினி டிடி!

  • IndiaGlitz, [Tuesday,September 28 2021]

விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம்வருபவர் திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் டிடி என்று அன்போடு அழைப்பதும் இவரது ஷோவிற்கு அதிக ரசிகர் கூட்டம் இருப்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். இதைத்தவிர விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் முக்கிய தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர ஒருசில திரைப்படங்களில் நடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சோஷியல் மீடியாவில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது பிகினி போன்ற ஒரு உடையை அணிந்து பாராசூட்டில் பயணித்துள்ளார். உலகம் முழுவதும் சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நிலையில் அந்தத் தினத்தை சிறப்பிக்கும் விதமாக அந்தமான் சென்றுள்ள அவர் பாராசூட்டில் பயணித்ததோடு பிகினி உடையைப் பற்றி ரசிகர்களுக்கு புது விளக்கத்தையும் அளித்துள்ளார்.  

அதில் “ஆடையில் ஒன்றும் கிடையாது, நம் மனநிலையில்தான் உள்ளது. அந்தமானில் இருக்கும் ஒரு ஆண்கள் கூட இந்த உடையை அணிந்து கொண்ட எனக்கு பாதுகாப்பு இல்லாமலோ இல்லை அசௌகரியமான உணர்வையோ கொடுக்கவில்லை.

மேலும் சுற்றுலா தினமான இன்று நான் விரும்புவது பெண்களும் இரட்டை பாலினத்தவர், தங்கள் கனவுகளை நோக்கி பயணம் செய்யும்போது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஊரடங்கு காரணத்தினால் சுற்றுலா துறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை நம்பி பல உயிர்கள் இருக்கிறது. அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்“ என்று பதிவிட்டு உள்ளார்.

இதையடுத்து டிடியை முதல்முறையாக பிகினி உடையில் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அவருடைய கேப்ஷனுக்கு பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.