ஆட்டோ டிரைவர்களுக்கு தளபதி விஜய் கொடுத்த விருந்து!

  • IndiaGlitz, [Monday,May 27 2019]

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1ஆம் தேதி ஆட்டோ டிரைவர்களுக்கு தளபதி விஜய் விருந்தளிப்பதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நேரம் என்பதால் மே 1ஆம் தேதி இந்த விருந்து நடைபெறவில்லை. இதனையடுத்து இந்த விருந்து நேற்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான ஆட்டோ டிரைவர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டு அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்தனர்.

'தளபதி 63' படப்பிடிப்பில் விஜய் இருப்பதால் அவரால் இந்த விருந்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்த விருந்தில் எந்தவித குறையும் இல்லாமல் தளபதி விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர் பிசி ஆனந்த் கவனித்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் விருந்திற்கு பின்னர் ஒவ்வொரு ஆட்டோ டிரைவர்களுக்கும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.