விஜய்யின் டாப் 10 ஆக்சன் படங்கள்
- IndiaGlitz, [Tuesday,June 21 2016]
விஜய்யின் டாப் 10 ஆக்சன் படங்கள்
விஜய் என்றாலே வெற்றி என்ற அர்த்தம் இருக்கும் நிலையில் விஜய்யின் படங்கள் மட்டும் வெற்றி பெறாமல் போகுமா? விஜய் நடித்த பெரும்பாலான படங்கள் குறிப்பாக ஆக்சன் படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு தயாரிப்பாளர்களுக்கு கைநிறைய லாபத்தையும் கொடுத்தது. ஆரம்ப காலகட்டத்தில் விஜய் ஆக்சன் படங்கள் மீது ஆர்வம் காட்டவில்லை என்றாலும் போகப்போக காலத்தின் கட்டாயத்தின் கட்டாயம் காரணமாக விஜய்யின் பார்வை ஆக்சன் படங்கள் மீது சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுரையில் விஜய்யின் 10 ஆக்சன் வெற்றி படங்கள் குறித்து பார்ப்போம்.
திருமலை:
பூவே உனக்காக' முதல் 'காதலுக்கு மரியாதை' வரை ரொமான்ஸ் நாயகனாக இருந்த விஜய்யை ஆக்சன் நாயகனாக மாற்றிய படம் 'திருமலை'. கே.பாலசந்தரின் கவிதாலாயா நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ரமணா இயக்கியிருந்தார். விஜய், ஜோதிகா, விவேக் உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் 13 வருடங்களுக்கு முன்பே ரூ.8 கோடியில் தயாராகி ரூ.30 கோடி வசூலித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கில்லி:
இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடித்த அடுத்த ஆக்சன் படம் இது. மேலும் விஜய்யின் ஆக்சன் படங்களில் இப்போது வரை இதுதான் பெஸ்ட் படமாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
திருப்பாச்சி:
இயக்குனர் பேரரசுவின் முதல் படமாகவும் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகவும் அமைந்த இந்த படம் தங்கையின் நல்வாழ்விற்காக எதையும் செய்யத் துணியும் ஒரு அண்ணனின் கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். ஒட்டுமொத்த சென்னையையும் கலக்கி வந்த தாதாக்களை தனி ஆளாக நின்று களையெடுக்கும் இந்த படம் விஜய்யின் சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்றாக அமைந்தது.
சிவகாசி:
திருப்பாச்சி கொடுத்த மிகப்பெரிய வெற்றி காரணமாக மீண்டும் பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த படம் இது. அம்மா செண்டிமெண்ட் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் வெற்றி பெற்ற படம். விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்த இந்த படத்தில் நயன்தாரா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
போக்கிரி:
Tவிஜய்யின் ஆக்சன் படங்களில் மிகவும் பிடித்த படம் எது என்று கேட்டால் 'கில்லி'க்கு அடுத்து அனைவரும் சொல்லும் படம் 'போக்கிரி'. இந்த படத்தில் கேங்கஸ்டர் வேடத்திலும் போலீஸ் வேடத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படித்தியிருந்தார் விஜய். அவருடைய டயலாக் டெலிவரியும் பஞ்ச் வசனங்கள் பேசும் பாணி அனைவரையும் கவர்நதது என்பது குறிப்பிடத்தக்கது. அசின் நாயகியாக நடித்த இந்த படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதம்:
மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம். ஆக்சன், தங்கை செண்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி என அனைத்துமே சம விகிதத்தில் கலந்து கொடுத்த இந்த படம் ராபின்ஹூட் டைப்பில் தமிழில் வந்த வித்தியாசமான படம். ஹன்சிகா மற்றும் ஜெனிலியா நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் பாடல்களும் ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி:
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம். ஸ்லீப்பர்செல் என்ற தமிழ் ரசிகர்கள் அதுவரை கேள்விப்படாத சப்ஜெக்ட்டை வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் படம். காஜல் அகர்வால் ரொமான்ஸ், சத்யன் காமெடி மற்றும் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவராஸ்யம் குறையாக ஆக்சன் என ஒரு முழு மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இந்த படத்தை பார்த்தவர்களுக்கு கிடைத்தது. இந்த படம் ஒருசில பிரச்சனைகளை கடந்து வெளிவந்தாலும் விஜய்யின் பெஸ்ட் படங்களில் ஒன்றாக அமைந்தது.
ஜில்லா:
விஜய் மட்டும் தனித்து நடித்த பல ஆக்சன் படங்களை கொடுத்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் அவர் நடித்த ஆக்சன் படம். முதல் பாதியில் தந்தை மோகன்லால் சொல்படி கேட்கும் தனயனாகவும் இரண்டாம் பாதியில் மோகன்லாலை எதிர்த்து போராடும் காவல்துறை அதிகாரியாகவும் விஜய் நடித்த படம். விஜய்க்கும் மோகன்லாலுக்கும் சமவாய்ப்பு அமைந்த இந்த படத்தில் யார் நடிப்பு சிறந்தது என்பதை அறிய ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு இருவரும் போட்டி போட்டி நடித்த படம். 'துப்பாக்கி' நாயகி காஜல் அகர்வால் நாயகியாக நடித்த இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.
கத்தி:
துப்பாக்கி வெற்றியை அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம். விஜய்யின் இரண்டு வேடங்கள், விவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை, ஆகிய அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில் சமந்தாவின் ரொமான்ஸ் காட்சிகளும் இணைந்து பலம் சேர்த்தது. இந்த படத்தின் வெற்றியை பார்த்துதான் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது இந்த படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
'தெறி':
'புலி' என்ற தோல்வி படத்திற்கு பின்னர் ஒரு சூப்பர் ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த விஜய், அட்லி இயக்கத்தில் நடித்த படம். ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் செங்கல்பட்டு ஏரியா திரையரங்கு உரிமையாளர்களின் பிரச்சனையையும் மீறி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது இந்த படம். இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் அதிக வசூலை தந்த படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது. இந்த படத்தை திரையிட மறுத்த திரையரங்கு உரிமையாளர்கள் பின்னாளில் வருத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையும் ஒரு ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது.விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களும் ஆக்சன் படங்களாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யையும் ஆக்சன் படங்களையும் இனி பிரிக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டாலும் அவர் அவ்வப்போது மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். அந்த ஆசையை விஜய்யும் அவ்வப்போது நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் விஜய்க்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.