கமல் பாணியை பின்பற்றும் விஜய்
- IndiaGlitz, [Monday,August 29 2016]
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மீதி 30% படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இரண்டு மாத போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளை அடுத்து இந்த படம் வரும் 2017 பொங்கல் தினத்தன்று பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் முதன்முதலாக நெல்லைத்தமிழில் பேசி விஜய் கலக்கவுள்ளார். சமீபத்தில் பாபநாசம்' படத்தில் கமல்ஹாசன் பேசியது போல் விஜய்யும் நெல்லைத்தமிழில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ஜெகபதிபாபு மெயின் வில்லனாகவும், அவருக்கு அடியாளாக டேனியல் பாலாஜியும் நடித்து வருகின்றனர். இவர்களில் டேனியல் பாலாஜியும் நெல்லை தமிழில் பேசி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்திசுரேஷ், சதீஷ், பாப்ரிகோஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் இந்த பிரமாண்டமான படத்தை அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.