close
Choose your channels

விஜய், விஷாலுடன் சசிகுமார் மோதலா?

Thursday, February 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தை வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் ஏற்கனவே விஜய்யின் 'கத்தி' படத்தின் ரிலீஸ் தினத்தன்று விஷாலின் 'பூஜை' வெளியானது போல தற்போது விஜய்யின் 'தெறி' படம் ரிலீஸ் ஆகும் அதே ஏப்ரல் 14-ல் விஷாலின் 'மருது' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ராஜபாளையம் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் விஜய், விஷால் படங்களை அடுத்து அதே தமிழ்புத்தாண்டு தினத்தில் சசிகுமாரின் 'வெற்றிவேல்' படமும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 'தாரை தப்பட்டை படத்திற்கு பின்னர் குறுகிய காலத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இந்த படமும் ரிலீஸுக்கு தயாராகி வருவதாகவும், வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் மும்முனை போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வசந்தமணி இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமாருடன் மியா ஜார்ஜ், பிரபு, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ரேணுகா உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment