விஜய்-விஷால் படங்கள் மீண்டும் மோதலா?

  • IndiaGlitz, [Thursday,February 18 2016]

இளளயதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் 'கொம்பன்' பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்து வந்த 'மருது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்த படமும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் விஜய் நடித்த 'கத்தி' படமும், விஷால் நடித்த 'பூஜை' படமும் ஒரே நாளில் ரிலீசாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் இரு படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்கு பின்னரே மீண்டும் விஜய்-விஷால் படங்கள் மோதுமா? என்பது குறித்து தெரியவரும்