ஷாருக்கானுடன் 5வது முறையாக மோதும் விஜய்

  • IndiaGlitz, [Tuesday,March 01 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்த 'ஃபேன்' திரைப்படமும் கிட்டத்தட்ட அதே தேதியில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

விஜய் மற்றும் ஷாருக்கான் படங்கள் மோதுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே இருவரது படங்களும் நான்கு முறை ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளது. 'தெறி' மற்றும் ஃபேன்' ஒரே நாளில் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டால் இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் விஜய்யின் வேலாயுதம், துப்பாக்கி, தலைவா மற்றும் கத்தி ஆகிய விஜய் படங்கள் வெளியான தினத்தில்தான் ஷாருக்கானின் Ra one, Jab Tak Hai Jaan, Chennai Express மற்றும் Happy New Year ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இரண்டு மிகப்பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் இரண்டு படங்களின் வசூலும் இதுவரை பாதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தெறி', 'கபாலி' படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல்?

கோலிவுட் திரையுலகில் தயாரான படங்களில் தமிழில் பெயர் வைத்த படங்கள் மற்றும் 'U'சர்டிபிகேட் பெற்ற படங்களை தேர்வு செய்து தமிழக அரசு 30%...

கபாலி' கட்டிங் பணிகள் ஆரம்பம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் இயகக்த்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த 'கபாலி'...

'ஓகே கண்மணி'யின் இந்தி டைட்டில் என்ன தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் துல்கார் சல்மான், நித்யாமேனன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஓகே கண்மணி'...

'ஜீரோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Blueocean Entertaiment தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜீரோ' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றத

மிஷ்கின் - விஷால் இணையும் படம் அஞ்சாதே 2?

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்குவதாக இருந்த சண்டக்கோழி 2' திரைப்படம் டிராப் ஆனதையும், அதற்கு பதிலாக விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும்...