மார்ச் 20-ல் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

  • IndiaGlitz, [Wednesday,March 16 2016]
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த படத்தின் பாடல்களை விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி விஜய் ரசிகர்களுக்கு அன்றைய தினம் காத்திருக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'தெறி' படத்தின் டிரைலரை படக்குழுவினர் விறுவிறுப்பாக தயார் செய்து வருவதாகவும், இசை வெளியீட்டு தினத்திலேயே இந்த படத்தின் டிரைலர் வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான 'தெறி' படத்தின் டீசர் இணையத்தை ஒரு கலக்கு கலக்கியதோடு, இந்திய அளவில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலரும் சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது.

More News

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் குறித்த முக்கிய தகவல்

பிரபல இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் கோலிவுட் நாயகனுமாகிய ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர்...

இருமுகனில் ஒருமுகமாகும் கருணாகரன்

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உளவுப்பிரிவு அதிகாரி மற்றும் திருநங்கை

தல அஜித்தின் 57வது படம் குறித்த முக்கிய தகவல்கள்

'தல அஜித் நடித்த 'வேதாளம் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்...

'கருடா''வுக்கு வில்லனாகும் 'ஆரம்பம்' நடிகர்

அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை...

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ அட்டை வழங்கும் விழா

ஏ.சி.எஸ். மருத்துவமனையும் நடிகர் சங்கமும் இணைந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.