விஜய்யின் 'தெறி' பட டிராக்-லிஸ்ட்

  • IndiaGlitz, [Friday,March 18 2016]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் இசைவெளியீடு வரும் ஞாயிறு அன்று மிக பிரமாண்டமாக சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது.
'தெறி' படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், மொத்தம் ஏழு பாடல்கள கம்போஸ் செய்துள்ளார். இவற்றில் இரண்டு பாடல்களை கவிஞர் கபிலனும் மற்ற ஐந்து பாடல்களை நான்கு வெவ்வேறு கவிஞர்களும் எழுதியுள்ளனர். தற்போது இந்த படத்தின் டிராக்லிஸ்ட்டை பார்ப்போம்.
1. 'ஜித்து ஜில்லா'டி என்ற இளையதளபதியின் அறிமுகப்பாடலை தேனிசை தென்றல் தேவா மற்றும் பாலசந்திரன் பாடியுள்ளனர். இந்த பாடலை ராகேஷ் எழுதியுள்ளார்.
2. 'என் ஜீவன்' என்று தொடங்கும் பாடலை கவிஞர் நா.முத்துகுமார் எழுதியுள்ளார். இந்த பாடலை ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர்..
3. ஈனா மீனா டீக்கா' என்று தொடங்கும் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இந்த பாடலை உத்ரா உன்னிகிருஷ்ணன் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியுள்ளனர்.
4. செல்லக்குட்டியே என்று தொடங்கும் பாடலை கபிலன் எழுத அதை விஜய் மற்றும் நீதிமோகன் பாடியுள்ளனர்.
5. 'தாய்மை' என்று தொடங்கும் பாடல் ஒன்றை பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார். இந்த பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியுள்ளார்.
6. ராங்கு ராங்கு.. என்று தொடங்கும் அதிரடி குத்துப்பாடலை டி.ராஜேந்தர், ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் சோனு கக்கார் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார்.
7. டப் தெறி டப் என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியுள்ளார்.

More News

2.0 படத்தில் திடீரென இணைந்த அமிதாப்-அபிஷேக். புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நேற்று தொடங்கியது என்பதை ஏற்கனவே அறிவித்தோம்....

'தல 57' படம் குறித்த புதிய தகவல்

'வேதாளம்' வெற்றி படத்திற்கு பின்னர் தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தல 57' படத்தை இயக்குபவர் சிறுத்தை சிவா என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் உறுதியாகியுள்ள நிலையில்....

பாஜகவுக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா?

கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்ததில் இருந்து கோலிவுட் திரையுலகினர் பலர் அந்த கட்சியில் சேர்ந்தவண்ணம்...

ஷங்கரின் 2.0 படத்தில் எத்தனை பாட்டு. ராஜுமகாலிங்கம் விளக்கம்

ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டமும் பாடல்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அவருடைய முதல் படமான ஜெண்டில்மேன்...

விக்ரம் படத்தை மிஸ் செய்த கருணாகரன்

சீயான் விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பை இயக்குனர் விஜய் மில்டன் கொடுத்ததாகவும்...