'தெறி' படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு
Tuesday, March 29, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதையும் இந்த படம் இவ்வாரத்திற்குள் சென்சார் செய்யப்படும் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்ற செய்தி சமீபத்தில் வெளிவந்தது. இதன்படி தற்போது இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் இந்த படத்திற்கு "போலீஸ் ஓஹ்டு" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களுக்கு விஜய்க்கு குரல் கொடுத்த வாசு என்பவர்தான் இந்த படத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார். தமிழில் வெளியாகும் அதே ஏப்ரல் 14-ல் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள மாநிலமான கேரளாவிலும் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்படும் என தெரிகிறது. தெறி' என்றால் மலையாளத்தில் கெட்டவார்த்தை என்பதால் இந்த படத்திற்கு பொருத்தமான மலையாள தலைப்பை படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments