விஜய்யின் 'தெறி' டீசர் வெளியாகும் தேதி

  • IndiaGlitz, [Friday,January 22 2016]

இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'தெறி' படத்தின் 50 வினாடிகள் ஃபர்ஸ்ட்லுக் டீசர் இன்னும் பத்து நாட்களில் வெளிவரவுள்ளதாகவும், இந்த டீசருக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் இயக்குனர் அட்லி உள்பட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஐ.பி.எஸ் வேடத்தில் விஜய் நடித்த படம், விஜய்யின் மகள் திவ்யா மற்றும் மீனாவின் மகள் நைனிகா அறிமுகமாகும் படம், சமந்தா மற்றும் எமிஜாக்சன் என இரண்டு முன்னணி நடிகைகள் நடித்துள்ள படம் என பல பெருமைகளை பெற்றுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.