'தெறி' டீசருக்கு ஏற்பட்ட சதியை முறியடித்த படக்குழுவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'தெறி' டீசர் இன்று அதிகாலை வெளியாகி மிகக்குறைந்த நிமிடங்களில் லட்சக்கணக்கில் பார்வையாளர்களையும், லைக்குகளையும் அள்ளிய நிலையில் திடீரென தயாரிப்பாளர் தாணுவின் அதிகாரபூர்வ வீடியோ இணையதளத்தில் இருந்து 'தெறி' டீசர் நீக்கப்பட்டது. இதனால் தெறி படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'தெறி' டீஸரில் அமைந்துள்ள 'கன்டென்ட்' சிலவற்றுக்கு வேறொரு தளம் காப்புரிமை கோரியதால் இந்த டீசர் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு, ""பிரம்மாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறேன். யூடியூப் தளத்தில் சாதனை படைத்திருக்க வேண்டிய தருணத்தில் நீக்கியிருக்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் தொழில்நுட்ப குழு துரிதமாக இயங்கி வருகிறது" என்று கூறினார்.
இந்நிலையில் தொழில்நுட்ப குழுவினர்களின் தீவிர முயற்சியால் 'தெறி' டீசர் மீட்கப்பட்டு மீண்டும் அதே தளத்தில் இயங்கி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments