33 மணி நேரத்தில் 3 மில்லியன் 'தெறி' பார்வையாளர்கள்
- IndiaGlitz, [Saturday,February 06 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் டீசர் நேற்று அதிகாலை 12 மணிக்கு வெளியானது. இந்த படத்தின் டீசர் வெளியான முதல் நிமிடத்தில் இருந்தே பார்வையாளர்களும், லைக்குகளும் குவிந்த நிலையில் தற்போது 33 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 175,000 லைக்குகளையும் இந்த டீசர் அள்ளியுள்ளது.
விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் இந்த படத்தின் டீசர் கவர்ந்ததே இந்த அளவுக்கு பார்வையாளர்கள் மற்றும் லைக்குகள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று காலை ஒருசில நிமிடங்கள் 'தெறி' படத்தின் டீசர் ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருந்த நிலையிலும் இந்த அளவு பெரும் வரவேற்பை பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தின் வியாபாரம் உச்ச நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகபட்சமான தொகைக்கு இந்த படம் வியாபாரம் ஆகும் என்றும் அதேபோல் வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.