close
Choose your channels

விஜய்யின் 'தெறி' ஸ்பெஷல் காட்சி குறித்த முக்கிய அறிவிப்பு

Friday, March 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை விஜய் ரசிகர்களால் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தினத்தை நோக்கியே அனைவரின் பார்வையும் சென்றுள்ளது.

'தெறி' படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக சென்னை உள்பட அனைத்து இந்திய நகரங்களிலும் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 14ஆம் தேதிக்கான டிக்கெட்டுக்கள் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ரிசர்வ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ், உள்பட தென்னிந்திய படங்களை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனமான 'சினி கேலக்ஸி' 'தெறி' படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் ரிலீஸ் உரிமைகளை பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிறுவனம் ஏப்ரல் 13ஆம் தேதியே இந்த படத்தின் ஸ்பெஷல் காட்சியை அமெரிக்காவில் திரையிட உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மேற்கண்ட இருநாடுகளிலும் 'தெறி' படம் ரிலீஸாகும் திரையரங்குகள் குறித்த விபரங்களையும் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.
இதே நிறுவனம்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' மற்றும் சூர்யாவின் '24' ஆகிய படங்களின் அமெரிக்க ரிலீஸ் உரிமைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment