close
Choose your channels

விஜய்யின் 'தெறி' பாடல்கள் குறித்த முக்கிய தகவல்கள்

Wednesday, March 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டிற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் 'தெறி' படத்தின் ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் டி.ராஜேந்தர்-சோனுகக்கார் பாடிய 'ரங்கம்மா' என்னும் குத்துப்பாட்டு, 'ஜித்து ஜில்லாடி' என்னும் விஜய்யின் அறிமுகப்பாடல் மற்றும் விஜய்-நீதிமோகன் பாடிய செல்லக்குட்டியே பாடல் ஆகியவைகளும் அடங்கும். இந்த மூன்று பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள 'தெறி' படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகவுள்ளது. காவல்துறை அதிகாரியாக விஜய்யும், டாக்டராக சமந்தாவும் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment