விஜய்யின் 'தெறி' பாடல்கள் குறித்த முக்கிய தகவல்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 09 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டிற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் 'தெறி' படத்தின் ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் டி.ராஜேந்தர்-சோனுகக்கார் பாடிய 'ரங்கம்மா' என்னும் குத்துப்பாட்டு, 'ஜித்து ஜில்லாடி' என்னும் விஜய்யின் அறிமுகப்பாடல் மற்றும் விஜய்-நீதிமோகன் பாடிய செல்லக்குட்டியே பாடல் ஆகியவைகளும் அடங்கும். இந்த மூன்று பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள 'தெறி' படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகவுள்ளது. காவல்துறை அதிகாரியாக விஜய்யும், டாக்டராக சமந்தாவும் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

More News

'இறுதிச்சுற்று' கதையை திடீரென மாற்றிய இயக்குனர்.

மாதவன், ரித்திகாசிங் நடிப்பில் சுதா இயக்கத்தில் சமீபத்தில் தமிழ், மற்றும் இந்தியில் வெளியான 'இறுதிச்சுற்று' திரைப்படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்...

ஹாலிவுட் பட ரீமேக்கில் நயன்தாரா?

கடந்த 2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆன த்ரில் திரைப்படம் 'ஆர்பன்'. இந்த படத்தில் ஒரு குழந்தை பேயாக நடித்திருக்கும்...

இரண்டு சீனியர் நடிகர்களுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் இரண்டையுமே வெற்றிகரமாக கொண்டு சென்று அனைவரையும் அசத்தி வருகிறார்...

காதலும் கடந்து போகும். திரை முன்னோட்டம்

தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' உள்பட ஒருசில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து கொண்டிருந்த விஜய்சேதுபதியை இயக்குனர் சீனுராமசாமி தனது...

சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த இன்ப அதிர்ச்சி

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்து முடித்துள்ள '24' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை...