close
Choose your channels

'தெறி'யின் ஜித்து ஜில்லாடியின் கலக்கலான பாடல் வரிகள்

Monday, February 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் பெரும் சாதனை புரிந்துள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாக இந்த படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வெளியிட இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.


ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில், "Thinking over a single soon #jithujilladi' என்று தெரிவித்துள்ளார். 'தெறி' படம் ஜி.வி.பிரகாஷின் 50வது படமாக இருப்பதால் இந்த படத்தின் பாடல்கள் ஸ்பெஷலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தின் ஓப்பனிங் பாடலான ஜித்து ஜில்லாடி பாடலின் ஒருசில வரிகளையும் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி.... தொப்பியில சிங்கத்த பாரேன், தோளுல ஸ்டார வாங்கும் போலீசு காரன்..போன்ற வரிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளதாக அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.