கர்நாடகத்தில் 'கத்தி'யுடன் இணைந்த 'தெறி'
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளின் ஏரியாக்களின் ரிலீஸ் உரிமைகள் பெருந்தொகைக்கு விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநில உரிமையின் வியாபாரமும் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
'தெறி' படத்தின் கர்நாடக மாநில உரிமையை 'கோல்டி பிலிம்ஸ்' (Goldie Films) நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதே நிறுவனம்தான் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' படத்தை கர்நாடகத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் 'தெறி' படத்தை பெருவாரியான திரையரங்குகளில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் பெங்களூரு நகரில் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்திற்காக திரையரங்குகள் புக் செய்யும் பணியை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், மீனா மகள் நைனிகா மற்றும் விஜய் மகள் திவ்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments