இளையதளபதி விஜய்யின் 'தெறி'. ஒரு முன்னோட்டம்
- IndiaGlitz, [Tuesday,April 12 2016]
இளையதளபதி விஜய்யின் தெறி திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் முன்னோட்டத்தை கொஞ்சம் அலசுவோம்.
'புலி' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் அதன் தாக்கம் கொஞ்சம் கூட 'தெறி' படத்தின் வியாபாரத்தில் தெரியவில்லை. அதுதான் விஜய்யின் மாஸ்க்கு ஒரு எடுத்துக்காட்டு.
விஜய் படத்தை இயக்க கிட்டத்தட்ட பத்து முன்னணி இயக்குனர்களில் காத்திருக்கும் நிலையில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் ஒரே ஒரு படம் மட்டுமே இயக்கிய இயக்குனர் அட்லிக்கு விஜய் வாய்ப்பு கொடுத்திருக்கின்றார் என்றால் அவர் கூறிய கதையின் ஆழம்தான் நிச்சயம் காரணமாக இருக்க வேண்டும்.
முதன்முதலாக விஜய்யுடன் காமெடி டிராக்கில் இணைந்துள்ளார் மொட்டை ராஜேந்திரன். இந்த காம்பினேஷன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் ரசிகர்களிடம் இருக்கும்,
குழந்தை நட்சத்திரமான மீனா மகள் நைனிகாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படம். தந்தை-மகள் பாசத்தை வெளிப்படுத்தியுள்ள விஜய்-நைனிகா நடிப்பை கண்டிப்பாக திரையில் ரசித்து பார்க்க வேண்டும்
முதன்முதலாக விஜய் மகள் திவ்யாவை திரையில் பார்க்க விஜய் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திய படம்.
பொதுவாக போலீஸ் படம் என்றாலே ஆக்சன் அதிகமாக இருக்கும். அதிலும் விஜய் போலீசாக நடித்தார் என்றால் கேட்கவே வேண்டாம். மேலும் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்த ஆக்சன் காட்சிகள் கண்டிப்பாக ரசிகர்களை விசிலடிக்க வைக்கும்.
'வெயில்' படத்தில் அறிமுகமான ஜி.வி.பிரகாஷூக்கு இது 50வது படம். ஏற்கனவே பாடல்களை தெறிக்க வைத்த அவர் கண்டிப்பாக பின்னணி இசையிலும் தெறிக்க வைத்திருப்பார்.
அட்லியின் முதல்படமான 'ராஜா ராணி'யில் இரண்டு ஹீரோயின்களின் ரொமான்ஸ் முக்கியத்துவம் பெற்றது., அதேபோல் இந்த படத்தில் செல்பி புள்ளே சமந்தா மற்றும் குல்பி புள்ளே எமிஜாக்சனின் ரொமான்ஸ் காட்சிகள் கண்டிப்பாக ரசிக்கும்படியாக இருக்கும்
கோடை விடுமுறையில் அதுவும் தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையில் வெளியாவதால் கண்டிப்பாக நான்கு நாட்கள் ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இயக்குனர் மகேந்திரனை முதல்முதலாக திரையில் பார்க்க ஒரு வாய்ப்பை கொடுத்த படம் 'தெறி'
விஜய்யுடன் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ராதிகாசரத்குமார் நடித்த படம்
மேற்கண்ட காரணங்கள் உள்பட பல காரணங்கள் 'தெறி'யை பார்க்க காரணங்களாக அமைந்துள்ளன. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழு அளவில் பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் திரைவிமர்சனத்தை வரும் 14ஆம் தேதி பார்ப்போம்.