'தெறி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 03 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 13ஆம் தேதி அல்லது 20ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளிவந்த நிலையில் தற்போது மார்ச் 20 தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


இந்த படம் ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்பதால் ஜித்து ஜில்லாடி பாடல் உள்பட அனைத்து பாடல்களையும் ஜி.வி.பிரகாஷ் மிகுந்த சிரத்தையெடுத்து கம்போஸ் செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் கில்லி' பட பாடல்களுக்கு இணையாக இருக்கும் என்று ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்,சமந்தா, எமிஜாக்சன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்க, பெரும் பொருட்செலவில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜயகாந்துக்கு கார்த்திக் சொன்ன முக்கிய அறிவுரை

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் திவீரமாக இருந்து வருகின்றன...

'தெறி' ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் சமீபத்தில் தெறி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக மாபெரும் இசை வெளியீட்டு விழாவை எதிர்நோக்கியுள்ளது...

மீண்டும் தொடர்கிறது 'கெத்து' வரிவிலக்கு பிரச்சனை

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்த 'கெத்து' திரைப்படத்தின் டைட்டில் தமிழில் இல்லை என்ற காரணத்தால் தமிழக அரசு இந்த படத்திற்கு வரிவிலக்கு...

சரத்குமார் மீது போலீஸ் புகார். நடிகர் சங்கம் அதிரடி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த சரத்குமார் சங்கத்தின் கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கவில்லை...

அல்போன்ஸ் புத்திரனின் அலட்சிய படைப்புதான் 'பிரேமம்' நடுவர் குழு தலைவரின் சர்ச்சை கருத்து

சமீபத்தில் கேரள அரசு திரைப்பட விருதுகளை அறிவித்திருந்த நிலையில் கேரளாவிலும், தமிழகத்திலும் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' படத்திற்கு ஒரு விருதுகூட கிடைக்காமல்...