'தெறி'க்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு

  • IndiaGlitz, [Saturday,March 26 2016]
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெற்ற வரவேற்பு இதுவரை வேறு எந்த விஜய் படத்திற்கு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டதாகவும் டிரைலரை பார்த்த ரஜினிகாந்த், விஜய், அட்லி உள்பட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டாரின் பாராட்டு 'தெறி' படக்குழுவினர் மேலும் ஊக்கத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ல் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளிவரவுள்ளது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

More News

விஜய்யின் 'தெறி' ஸ்பெஷல் காட்சி குறித்த முக்கிய அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை விஜய் ரசிகர்களால் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள...

கேப்டன்களாக மாறிய சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ்

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு நிதி திரட்டுவதற்காக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டி நடைபெறவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

சீயான் விக்ரம் தற்போது அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது...

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த நடிகர் சங்கத்திற்கு மட்டுமே கிடைத்த ஒரு பெருமையை சங்கத்தின் துணைத்தலைவர் கருணாஸ் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்...

நயன்தாராவின் பேய்ப்படத்தில் யார் ஹீரோ தெரியுமா?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த முதல் பேய்ப்படமான 'மாயா' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்து வரும் மற்றொரு...