'கத்தி' - 'ஐ' படங்களுடன் கனெக்ஷன் ஆன 'தெறி'

  • IndiaGlitz, [Tuesday,February 02 2016]

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டப்பிங் பணியை விஜய் முடித்துவிட்டார் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் விஜய்யை அடுத்து எமிஜாக்சனின் டப்பிங் பணியும் முடிந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.


விஜய்யின் 'கத்தி', ஷங்கரின் 'ஐ', மற்றும் தனுஷின் 'அனேகன்' உள்பட பல படங்களின் நாயகிக்கு பின்னணி குரல் கொடுத்த பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா, 'தெறி' படத்தில் நாயகிகளில் ஒருவரான எமிஜாக்சனுக்காக குரல் கொடுக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது எமிஜாக்சன் பகுதியின் டப்பிங் பணி முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ரவீனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அடுத்ததாக சமந்தா சம்பந்தப்பட்ட டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டப்பிங் பணிகள் உள்பட 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த டீசரை வரவேற்க சமூக வலைத்தளங்களில் இப்போதே விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

More News

'தர்மதுரை' படப்பிடிப்பில் விஜய்சேதுபதி காயம்

விஜய்சேதுபதி நடித்த 'காதலும் கடந்து போகும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து இம்மாதம் வெளியாகவுள்ள...

சிம்புவின் 'இது நம்ம ஆளு' டிராக் லிஸ்ட் வெளியீடு

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில்...

'கெத்து' என்பது கன்னட வார்த்தை. நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை அல்ல என்பதை காரணம் காட்டி தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை மறுக்கப்பட்டதை...

சிம்புவுடன் முதன்முதலாக இணைகிறார் ஸ்ருதிஹாசன்

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'இது நம்ம ஆளு' படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலை உள்ளது...

உலகின் எந்த விருதுக்கும் பரிந்துரைக்கலாம். 'விசாரணை' குறித்து வசந்தபாலன்

தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விசாரணை' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச விருதுகளை பெற்று சிறப்பு பெற்றது...