தெறி'யில் விஜய்யின் பணி முடிந்தது

  • IndiaGlitz, [Monday,February 01 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக விஜய் இந்த படத்திற்கான டப்பிங் பணியை முடித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் 'தெறி' படத்தை பொறுத்தவரை அவருடைய பணி முற்றிலும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் விஜய் தனது குடும்பத்தினர்களுடன் ஓய்வு எடுப்பதற்காக விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதாகவும், அவர் திரும்பி வந்தவுடன் '''விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 'விஜய்ய 60' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

தெறி: விஜய் மகளுக்கு பின்னணி கொடுத்த தேசிய விருது பெற்ற பாடகி

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் படக்குழுவினர்களால் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

ஜீவாவின் 'போக்கிரி ராஜா' டீசர் ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 'யான்' திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில்...

விஜய் 60' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

'தெறி' டீசரில் உள்ள காட்சிகள். ரகசியத்தை உடைத்த ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடிப்பில் 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கியுள்ள 'தெறி' படத்தின் டீசர் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது...

'டார்லிங் 2' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதை அனைவரும் அறிவோம்...