விஜய்யின் 'தெறி'. ஃபர்ஸ்ட் லுக் விமர்சனம்

  • IndiaGlitz, [Wednesday,November 25 2015]

இளையதளபதி விஜய் நடித்து முடிக்கவுள்ள 'விஜய் 59' படத்தின் டைட்டில் கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே 'தெறி' என்று அறிவிக்கப்பட்டுவிடது. பொதுவாக விஜய் படம் என்றால் அதுவும் ஆக்சன் படம் என்றால் தெறிக்க விடும் அளவுக்குத்தான் இருக்கும். அதையே டைட்டிலாக வைத்துள்ள இந்த படம் நிச்சயம் தெறிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.


மின்னல் பின்னணியில் கையில் துப்பாக்கியுடன் விஜய் ஓடி வரும் ஸ்டில்லில் இருந்தே இது ஒரு பக்கா ஆக்சன் படம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. போக்கிரி, ஜில்லா வரிசையில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடிக்கும் இந்த படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது.


அதே போல் அடுத்த ஸ்டில்லில் மூன்று வித்தியாசமான தோற்றத்தில் விஜய் உள்ளது பல ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. தாடி மற்றும் கண்ணாடியுடன் நார்மலான தோற்றத்தில் ஒரு விஜய்யும், போலீஸ் உடையில் கூர்மையான அதே நேரத்தில் ஒரு மெல்லிய புன்னகையுடன் கூடிய இன்னொரு தோற்றம், மூன்றாவதாக கோபத்துடன் பார்க்கும் ஒரு தோற்றம் என மூன்று தோற்றங்களும் பெரிய சஸ்பென்ஸ்ஸை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விஜய் 59' பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் டைட்டில் 'தெறி' என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.....

ஜெய்யின் 'புகழ்' சென்சார் தகவல்கள்

இளம் நடிகரான ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், மற்றும் வலியவன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாமல்...

'பாகுபலி 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று சுமார் ரூ.600...

மீண்டும் இணையும் விஜய்-அட்லி கூட்டணி?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கோவாவில் நடைபெற்று வருகிறது...

ஆர்யா-அனுஷ்காவின் 'இஞ்சி இடுப்பழகி'. ஒரு முன்னோட்டம்

ஆர்யாவின் சமீபத்திய படங்களான 'புறம்போக்கு', வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன் ஆகிய படங்கள் சுமாராக ஓடிய நிலையில் அவர் பெரிதும் நம்பியிருக்கும் படம் தான் 'இஞ்சி இடுப்பழகி'...