1 மாதத்திற்கு முன்பே 'தெறி'யின் முன்பதிவு ஆரம்பம்.

  • IndiaGlitz, [Monday,March 14 2016]
இளையதளபதி விஜய்யின் 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அந்த தேதியை உறுதி செய்யும் வகையில் எஸ்.பி.ஐ சினிமாஸ் இந்த படத்திற்கான முன்பதிவை தொடங்கிவிட்டது.

கோவை மற்றும் சென்னை எஸ்.பி.ஐ சினிமாஸ் திரையரங்குகளில் முதல்நாள் முதல் காட்சியில் இளையதளபதியை பார்க்க விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்ததால் ஒருசில வினாடிகள் முதல் நாளுக்குரிய டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகி முடிந்துவிட்டது.
பொதுவாக ஒரு படத்திற்கு மூன்று முதல் ஒரு வாரத்திற்கு முன்புதான் ரிசர்வேஷன் தொடங்கப்படும். ஆனால் 'தெறி' படத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரிசர்வேஷன் தொடங்கியுள்ளது. அதுவும் அதிகாரபூர்வமாக இன்னும் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவிக்கும் முன்பே முதல் நாளுக்குரிய ரிசர்வேஷன் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று 'தெறி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

More News

நடிகர் சங்கத்தின் மற்றொரு மகத்தான உதவி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று கொண்ட இளையதலைமுறை நடிகர்கள் நடிகர்களுக்கு மட்டுமின்றி சமுதாய சேவைகளையும்...

முதன்முதலாக பேயாக நடிக்கும் ராதாரவி

நடிகர் ராதாரவி கடந்த பல வருடங்களாக பல்வேறு கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தபோதிலும் இதுவரை அவர் பேய் வேடத்தில் நடித்ததில்லை...

விக்ரமின் இருமுகன் - கருடா படங்களின் முக்கிய தகவல்கள்

அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்ப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் மலேசியாவில் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் 20...

'தெறி' இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய்யின் 59வது படமும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படமும் ஆன 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா...

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' டிராக்லிஸ்ட்

சிபிராஜ் நடித்த 'ஜாக்சன் துரை' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளீவந்த நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது...