24 வருட விஜய்யின் திரையுலக வரலாற்றில் 'தெறி' செய்த முதல் சாதனை

  • IndiaGlitz, [Monday,June 27 2016]

இளையதளபதி விஜய் திரையுலகிற்கு வந்த இந்த 24 வருடங்களில் சமீபத்தில் வெளியான 'தெறி' திரைப்படம்தான் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான இந்த படம் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது. ரஜினி படங்களை அடுத்து மிகப்பெரிய வசூலை பெற்ற தமிழ்ப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த 'துப்பாக்கி' ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை செய்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் அதே சாதனையை செய்துள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.65 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சமந்தா, நைனிகாவின் இயல்பான நடிப்பு, அட்லியின் அழுத்தமான அதே நேரத்தில் எண்டர்டெயின்மெண்ட் கலந்த திரைக்கதை, ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு ஒருசில காரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' குறித்த தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் முதல்முறையாக நடிக்கும் 'சபாஷ் நாயுடு'...

'கபாலி' சென்சார் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பாரப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது...

'கபாலி'யின் 3வது டீசர் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் முதல் டீசர் கடந்த மே 1ஆம் தேதியும், 2வது டீசர் கடந்த 16ஆம் தேதியும்...

சிம்புவின் மூன்றில் ஒன்று ரிலீஸ். ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் அவர் மூன்று வித்தியாசமான வேடங்களில்...

அஜித்தின் 'வேதாளத்துடன் கனெக்ஷன் ஆனது 'கபாலி'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அந்த படத்தை பற்றிய விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...