'தெறி' விஜய்யின் அறிமுகப்பாடல் குறித்த புதிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,January 21 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் பாடல்கள் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது.


'தெறி' படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 50வது படம் என்பதால் அவர் பிரத்யேகமாக கூடுதல் முயற்சியுடன் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்துள்ளதாகவும், விஜய்யின் 'கில்லி' படத்திற்கு பின்னர் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும் படமாக 'தெறி' இருக்கும் என்றும் ஜி.வி.பிரகாஷ் தனது நட்பு வட்டாரத்தில் நம்பிக்கையுடன் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் விஜய்யின் அறிமுகப்பாடல் 'ஜித்து ஜில்லாடி...மிட்டா கில்லாடி' என்று தொடங்குவதாகவும், விஜய்யின் மாஸ் பாடல்களில் இந்த பாடலும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீடு விரைவில் நடைபெறவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

More News

விஜய்க்கு 5 நாட்களை மிச்சப்படுத்திய அட்லி

இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த 'தெறி'...

'அரண்மனை 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விபரங்கள்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது 'அரண்மனை 2' ...

விஜய் குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் இன்னொரு நபர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தில் விஜய்யின் மகள் கேரக்டரில் நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே...

டைட்டில் ஆனது 'பாட்ஷா' படத்தின் அனல் பறக்கும் வசனம்

பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு இன்று மாலை...

சமந்தா, நயன்தாரா பாணியை பின்பற்றும் தமன்னா

நடிகை தமன்னா இதுவரை தான் நடித்த படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ் மூலம் டப்பிங் பேசப்பட்டு ...