கபாலி' சாதனையை முறியடித்ததா தெறி?

  • IndiaGlitz, [Friday,November 27 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'மெட்ராஸ்' ரஞ்சித் இயக்கி வரும் 'கபாலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனபோது முதல் நாளில் 'கபாலி' பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை டுவிட்டரில் 11ஆயிரம் பேர் பகிர்ந்து சாதனை செய்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வெளியான விஜய்யின் 'தெறி' படத்தின் போஸ்டர்கள் ஒரே நாளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக 'கபாலி'யின் சாதனையை 'தெறி' முறியடித்துவிட்டதாகவும் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும் கபாலி, தெறி ஆகிய இரண்டு படங்களின் தயாரிப்பாளரும் எஸ்.தாணு என்பதால் அவர் தயாரித்து வரும் இரண்டு படங்களுமே சாதனை செய்ததாக கருதப்படுவதாகவும் சிலர் பதிவு செய்துள்ளனர்.