'தெறி'யின் த்ரில் காட்சிக்காக ரிஸ்க் எடுத்த அட்லி
- IndiaGlitz, [Sunday,January 10 2016]
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் த்ரில் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளதாக இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அட்லியின் இயக்கத்தில் முழுதிருப்தி அடைந்துள்ள விஜய், மீண்டும் அட்லிக்கு தனது படத்தை இயக்க ஒரு வாய்ப்பு கொடுக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று 'தெறி' படத்திற்காக தண்ணீருக்குள் ஒரு காட்சியை அபாரமாக படமாக்கியுள்ளார் அட்லி. இந்தக் காட்சிக்காக ஆழ்கடலில் மூழ்கும் அனுபவமுள்ள வீரர்கள் வரவழைக்கப்பட்டதாகவும், இந்த காட்சியை மிகவும் ரிஸ்க் எடுத்து அட்லி மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் படமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார்,இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.