100வது நாளுக்கு பின் 'தெறி'யின் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,July 25 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி சமீபத்தில் 100வது வெற்றி நாள் என்ற மைல்கல்லை கடந்தது. 'தெறி' படத்திற்கு பின்னர் 'கபாலி' உள்பட பல படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும் 'தெறி'யின் வசூல் திருப்திகரமாகவே இருந்து வருகிறது.
100வது நாளிற்கு பின் சென்னையில் கடந்த வார இறுதியில் 9 காட்சிகள் ஓடிய 'தெறி' படம் ரூ.20,160 வசூல் செய்துள்ளதோடு தியேட்டரில் 55% இருக்கைகள் நிறைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் இந்த படம் ரூ.11.90 கோடி இதுவரை வசூல் செய்து அதிகபட்ச 'சென்னை வசூல்' என்ற சாதனையையும் பெற்றுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இந்த ஆண்டின் வெற்றி தயாரிப்பாளர் என்ற பெருமையை பெறுகிறார். இவர் தயாரித்த 'தெறி' ஏற்கனவே சாதனை வசூலை பெற்றுள்ள நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கபாலி' படமும் இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. கலைப்புலி தாணு அவர்களுக்கு 2016ஆம் ஆண்டு மறக்க முடியாத வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

More News

இந்திய திரையுலகில் 'கபாலி' செய்த புதிய சாதனை

இந்திய மக்கள் தொகையில் தமிழ் பேசுபவர்களின் மக்கள் தொகை வெறும் 5%தான். ஆனால் ஒரு தமிழ்ப்படம்...

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ஹாலிவுட் படத்தில் நாசர்

ஜூராஸிக் பார்க்' உள்பட பல வித்தியாசமான படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள 'The BFG' என்ற திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 29 ஆம் தேதி தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

பிறந்த நாள் விழாவில் ரசிகர்களுக்கு சூர்யா வைத்த வேண்டுகோள்

நடிகர் சூர்யா இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இன்று தனது பிறந்த நாளின்போது ரசிகர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாடினார்.

பாடல்களே இல்லாத த்ரில் படத்தில் ரகுமான்

'நிலவே மலரே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கடந்த 30 ஆண்டுகளில் பல படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்தவர் ரகுமான். கடந்த ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

வெங்கட்பிரபுவின் 'சென்னை 600028 II' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சரியான 9 வருடங்கள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்&#