'தெறி' விஜய்யின் 'செல்லாக்குட்டி' பாடல் வரிகள்

  • IndiaGlitz, [Thursday,March 10 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் ஐந்து பாடல்களின் டிராக் லிஸ்ட் நேற்று வெளியானதை பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் பாடியுள்ள 'செல்லக்குட்டியே' என்று தொடங்கும் பாடல் வரிகளை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

செல்லாக்குட்டியே...
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லாக்குட்டியே
ஐ ஃபார் யூ, யூ ஃபார் மி
சேர்ந்தாக்க சுனாமி
யூ ஃபார் மி ஐ ஃபார் யூ
சேர்ந்தாக்க ஐ லவ் யூ

என்ற வரிகள் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் நீதிமோகன் குரல்களில் உருவாகியுள்ள இந்த பாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பாடிய இந்த பாடல் திரையில் தோன்றும்போது ரசிகர்களை தெறிக்க வைப்பது உறுதி என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஜி.வி.பிரகாஷூக்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அருள்நிதி இயக்குனருடன் கைகோர்க்கும் சீயான் விக்ரம்

சீயான் விக்ரம் தற்போது ஆனந்த்சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும்...

கார்த்திக் சுப்புராஜூடன் மணிரத்னம்-கெளதம் மேனன் இணைவார்களா?

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது 'இறைவி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது...

சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ரகசியம்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த் 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்...

கே.வி.ஆனந்தின் அடுத்த பட ஹீரோ குறித்த புதிய தகவல்

தனுஷ், அம்ரியா நடித்த 'அனேகன்' படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டபோதிலும் இந்த படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்...

தேர்தல் கமிஷனுக்கு திரையுலகம் விடுத்த வேண்டுகோள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வரும் மே மாதம் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் விதிகள் அமலுக்கு வந்துள்ளது...