'தெறி' சென்சார் தேதி?

  • IndiaGlitz, [Monday,March 28 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை சமீபத்தில் ரிலீஸ் ஆகி விஜய் ரசிகர்களின் மாபெரும் பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் 'தெறி' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு நிச்சயம் 'யூ' சர்டிபிகேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் அமெரிக்கா, கனடா, தெலுங்கு மாநிலங்கள், கோவை ரிலீஸ் உரிமைகள் விற்பனையாகிவிட்ட நிலையில் மற்ற ஏரியாக்களின் ரிலீஸ் உரிமை குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.,
விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேஷிரன், ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் 'தெறி' படத்தினை அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.