'தெறி' சென்சாருக்கு செல்வது எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,March 23 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பாடல்களும், டிரைலரும் விஜய் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து படக்குழுவினர் உற்சாகமாகி உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் பின்னணி இசைப்பணிகள் இவ்வார இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும், இம்மாத இறுதிக்குள் படத்தின் இறுதி காப்பி தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த படம் சென்சாருக்கு செல்ல தயாராகிவிடும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


'தெறி' படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டுள்ளதாகவும், சென்சாருக்கு பின்னர் படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இதுவரை இல்லாத அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் படமாக அமைந்துள்ளது.